முகப்பு /செய்தி /புதுச்சேரி / திருமணத்திற்கு கடன் கிடைக்காத விரக்தி: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

திருமணத்திற்கு கடன் கிடைக்காத விரக்தி: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி இளைஞர்

கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி இளைஞர்

Puducherry Atm Theft | திருமணத்திற்கு கடன் கிடைக்காத விரக்தியில் புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் வீதியில் இந்தியா ஒன் ஏடிஎம் மையம் உள்ளது. சனிக்கிழமை காலை அங்குள்ள ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து அதன் பொறுப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன், அந்த ஏடிஎம் மையத்தின் அருகேயுள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான அனு என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக காத்திருந்த அனுவை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அனுவுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு தேவையான பணத்துடன் ஊருக்கு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கதாததால், தினசரி தூங்கும் இடத்திற்கு அருகேயுள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

அதன்படி, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரும்புக் கம்பிகளை கட் செய்யும் கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததாக கூறினார். இருந்த போதும் உள் கதவை உடைக்க முடியாததால் திருடும் முயற்சியை கைவிட்டு ஊருக்கு தப்பிச்செல்ல முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அனுவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கட்டிங் மெஷின், இரும்பு கம்பிகளை கைப்பற்றினர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, Puducherry