ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

“ரோடே சரியில்ல அப்புறம் எதுக்கு வண்டி..” புதுச்சேரியில் பெட்ரோல் ஊற்றி பைக்கை எரித்த ஜூஸ் கடைக்காரர்...

“ரோடே சரியில்ல அப்புறம் எதுக்கு வண்டி..” புதுச்சேரியில் பெட்ரோல் ஊற்றி பைக்கை எரித்த ஜூஸ் கடைக்காரர்...

எரிக்கப்பட்ட பைக்

எரிக்கப்பட்ட பைக்

Puducherry News : புதுச்சேரியில் சாலை சரியில்லை என கூறி பைக்கை எரித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவை அரசு பொதுப்பணித்துறை சார்பில் கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ.4.47 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் முறைகோடு நடந்தாக கூறப்படுகிறது.

இதுபற்றி கரிக்கலாம்பாக்கம் - மடுகரை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜூஸ் கடை உரிமையாளரும், சமூக ஆர்வலருமான தணிகாசலம் என்பவர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இந்த புகாருக்கான விளக்கம் சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது. ஆனால் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. அசத்திய புதுச்சேரி ஆசிரியர்..!

இந்நிலையில், தரமற்ற சாலை போட்டதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தணிகாசலம் இன்று கரிக்கலாம்பாக்கம் 4 முனை சந்திப்பில் தனது சொந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி போராட்டம் நடத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது, பலரும் இந்த வாகனம் எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்த கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோட்டார் சைக்கிள் எரித்த தமிழ்வாணனை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு நடந்ததை மக்களுக்கு வெளிப்படுத்திய தணிகாசலத்தை கைது செய்ததற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry