ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி: தேவாலய பெருவிழாவில் அறுந்து விழுந்த கொடி.. கிறிஸ்துவ மக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி: தேவாலய பெருவிழாவில் அறுந்து விழுந்த கொடி.. கிறிஸ்துவ மக்கள் அதிர்ச்சி!

புதுச்சேரி பேராலயத்தில் கொடி அறுந்து விழுந்தது

புதுச்சேரி பேராலயத்தில் கொடி அறுந்து விழுந்தது

புதுச்சேரியில் உள்ள புனித ஜென்மராக்கினி அன்னை பேராலய பெருவிழா தொடக்க நிகழ்ச்சியில், கொடி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 331-வது ஆண்டு பங்கு பெருவிழா வெகு விமர்சையாக நேற்று மாலை துவங்கியது. இதில் புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் பங்கு தந்தை அல்போன்ஸ் சந்தனம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு பின்னர் விழா கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலய கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.

கொடி ஏற்றப்பட்ட போது திடீரென அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறுந்த கொடியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுத்தி சிறிய கொடி ஏற்பட்டது. இதனால் கொடியேற்றத்துக்கு வந்த கிறிஸ்துவ மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பேசிய புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், ”இன்று முதல் நவ நாட்களை நாம் துவங்கி உள்ளோம். நல்ல முறையில் ஜபமாலை செய்து பவனி வந்து கொடி ஏற்றினோம். ஆனால் கொடி அறுந்து விட்டது. ஏன் இப்படி நடந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இது நல்ல லட்சணம் அல்ல என நினைத்துக் கொண்டிருப்பார்கள். கயிறு தான் அருந்தது. கொடியை மேலே கொண்டு சென்று கட்டிவிட்டார்கள். அது பறந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

Also see... திருவண்ணாமலையில் கிரிவலம்: முக்கிய அறிவிப்புகள்!

மேலும்,” கயிறு அறுந்தததே தவிர இறைவனிடம் உள்ள தொடர்பு அறுந்து விடவில்லை. இது நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்க கூடிய ஒரு அடையாளம். இறைவன் நமக்கு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளார். நம்முடைய தொடர்பு இறைவனோடும் நமது பங்கு மக்களோடும் குடும்பத்தாரும் இருக்க வேண்டும். சுயநலம் மிக்கவராக நாம் மாறும்போது இறைவனின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. பாவக்கரையில் ஈடுபட்டால் இறைவன் தொடர்பு அறுந்து போய்விடும். கொடி அறுந்தது பெரிய விஷயம் அல்ல. நவ நாட்களில் தந்தையான இறைவனோடு தொடர்போடு இருக்க வேண்டும்” என பேராயர் கூறினார்.

பழமை வாய்ந்த புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம்

Also see... திருக்கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை!

இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு திருப்பலிகள் இங்கு நடைபெற உள்ளது என அறி. தொடர்ந்து முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி டிசம்பர் மாதம் 8-ம் தேதி் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 9-ம் தேதி காலை பெருவிழா கொடியிறக்கம் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் செய்த வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Puducherry