Home /News /puducherry /

அரசியலில் ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும்.. மாணவி கேள்விக்கு தமிழிசை பதில்

அரசியலில் ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும்.. மாணவி கேள்விக்கு தமிழிசை பதில்

தமிழிசை

தமிழிசை

Puducherry | துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள ஐந்து பள்ளிகளை இன்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி புதுச்சேரியில் உள்ள 75 பள்ளிகளைப் பார்வையிட்டு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் முயற்சியின் ஒரு பகுதியாக  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள ஐந்து பள்ளிகளை இன்று பார்வையிட்டார்.

முதலில் லப்போர்த்து வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டடார். இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர்  துணைநிலை ஆளுநரை உங்கள் துணிச்சலுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழிசை,"அச்சமில்லை...அச்சமில்லை" என பாரதியாரின் துணிச்சல் தான் காரணம்.. அரசியலில் ஜெயலலிதாவின் துணிச்சல் பிடிக்கும் என பதிலளித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை,” 75வது சுதந்திர தினத்தையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறேன். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அங்குள்ள குறைகள் தெரிந்து தீர்வு காணமுடியும். பள்ளி கல்வி துறை மேம்படுத்தப்படும்” என்றார்.

தமிழிசை செளந்திரராஜன்


மேலும், “ காரைக்காலில் காலரா பாதிப்பு குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறேன். முதலமைச்சர்களும் அங்கே சென்று சூழ்நிலையை கண்காணித்து வருவது குறித்து மகிழ்ச்சி. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. எதிர்பாராத நிலையில் இதுபோன்ற நோய் வருவதைத் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுத்து வருகிறது. நோய் தொற்று குறைந்து விட்டது. மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்றார்.

Also see... தன்மானத்துடன் வாழ பாஜகவை விட்டு திமுகவிற்கு வாருங்கள்... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு...

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழிசை, ”மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவு குறித்து சில புகார்கள் வருவதால் மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறேன். அவர்களது கருத்தை அறிந்து அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான அரசு பேருந்து 10 நாட்களில் இயக்கப்படும் என்றும் தமிழிசை தெரிவித்தார். கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Tamilisai Soundararajan

அடுத்த செய்தி