ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

“நானும் ரங்கசாமியும் அண்ணன் தங்கை மாதிரி.. அவர் மன உளைச்சலில் இருக்ககூடாது” - ஆளுநர் தமிழிசை பேச்சு

“நானும் ரங்கசாமியும் அண்ணன் தங்கை மாதிரி.. அவர் மன உளைச்சலில் இருக்ககூடாது” - ஆளுநர் தமிழிசை பேச்சு

முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை

முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் தமிழிசை

முதலமைச்சர் தனது சிரமத்தை கூறியிருப்பதால், அவரையும், அதிகாரிகளையும், அழைத்துப் பேசி காலதாமதத்தை சரிசெய்வோம் - ஆளுநர் தமிழிசை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலமைச்சரும் தானும் அண்ணன் தங்கை போல என்றும், எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை, அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர், போதிய அதிகாரம் இல்லை என முதலமைச்சர் ரங்கசாமி சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை என்றும், இதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே தீர்வு எனவும் தெரிவித்தார். அரசு ஊழியர்கள் சம்பந்தமான ஒரு பணியை செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு வருகிறது.

ஆனால், அந்த பணியை செய்து கொடுக்காமல் இருக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அதிகாரிகள் தேடிக்கண்டு பிடிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

நேற்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து விளக்கம் அளித்தார். எந்த கோப்புகளையும் கிடப்பில் போடவில்லை எனவும் முதலமைச்சர் தனது சிரமத்தை கூறியிருப்பதால், அவரையும், அதிகாரிகளையும், அழைத்துப் பேசி காலதாமதத்தை சரிசெய்வோம் எனவும் கூறினார்.

மேலும் தானும் முதலமைச்சர் ரங்கசாமியும் அண்ணன் தங்கை போன்றவர்கள் எனவும் அண்ணன் ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை அவரிடம் நேரடியாகவே கேட்டு நிச்சயம் சரி செய்வேன் எனவும் தெரிவித்தார்.

மாநில அந்தஸ்து விஷயத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆசையை வெளிப்படுத்தியிருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு என்னென்ன கிடைக்குமோ அது அனைத்துமே தற்போது கிடைத்து வருவதாகவும் விளக்கமளித்தார்.

First published:

Tags: BJP, Puducherry, Tamilisai