ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அயோத்தியில் அனுமன் ஜெயந்தி விழா - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் குழு

அயோத்தியில் அனுமன் ஜெயந்தி விழா - புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் குழு

அனுமன் பக்தர்கள்

அனுமன் பக்தர்கள்

Puducherry News : அயோத்தியில் நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழா- புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் குழு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவையில் இருந்து அயோத்திக்கு நடைபெற்ற குடை யாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்தாவது நாள் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி அகில பாரத இந்து மகா சபா சார்பில் அயோத்தியாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வார்கள்.

அதன்படி அயோத்தியாவில் நடைபெறும் அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி இந்து மகா சபையினர் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இந்த நிகழ்ச்சி முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தொடங்கியது.

இதையும் படிங்க : 10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - புதுச்சேரி மக்களுக்கு அரிய வாய்ப்பு

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களைப் பாடி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். டிசம்பர் 29-ம் தேதி பக்தர்கள் குழு அயோத்திக்கு சென்றடைவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்

First published:

Tags: Local News, Puducherry