Home /News /puducherry /

புதுச்சேரி அருகே ஆசையாக வாங்கிய பர்க்கரில் கையுறை..அதிர்ந்துபோன வாடிக்கையாளர்

புதுச்சேரி அருகே ஆசையாக வாங்கிய பர்க்கரில் கையுறை..அதிர்ந்துபோன வாடிக்கையாளர்

பர்கரில் இருந்த கை உறை

பர்கரில் இருந்த கை உறை

Puducherry | ஆரோவில் அருகே பிரபல உணவுக்கடையில் பர்கர் உள்ளே கை உறை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தர். அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த டேவிட் ( 29.) இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இவரும் இவரது நண்பரும் ஆரோவில் அருகே உள்ள பிரபல உணவுக்கடையான கேஎஃப்சி சிக்கன் சென்டரில் பர்கர் வாங்கி உள்ளனர். அதை சாப்பிடும் போது அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது (கை உறை) தெரியவந்தது.

அதை உடனடியாக ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறினார். அதற்கு டேவிட் வேண்டாம் என தெரிவித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.

Also see... முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை

தற்போது அந்த வீடியோ சமூக  வலைத்தளங்களில் பரவி  வருகிறது.  மேலும் பிரபல உணவுக் கடையில் சாப்பிடும் தின்பண்டத்தில் உள்ளே கை உறை இருந்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Food, Puducherry

அடுத்த செய்தி