மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதன்பேரில் புதுச்சேரியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசியவர், “ தமிழகத்திற்கு புதுச்சேரிக்கு என்ன கொடுத்தார்கள் என கேட்கிறார்கள் .உட்கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனை மத்திய அரசு அளிக்கிறது. இதனை வாங்க வேண்டியது மாநில அரசுகள்தான் என்றார். 15 வயது பெண் குழந்தை இருந்தால் எவ்வளவு வலி என தெரியும்.இந்த வலியை உணர்ந்த பிரதமர் மோடி ஸ்வச்பார்த் திட்டம் மூலம்கழிவறை கட்டியது பெண்களின் மானத்தை காப்பதற்கு தான் என்றும் ராஜா தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “ நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சம் மூலதனம் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிதி பற்றாக்குறை 5.1% குறைக்கப்பட்டுள்ளது மேலும் 2025-26 பட்ஜெட்டுக்குள் நிதி பற்றாக்குறை முழுமையாக தீரும் என்றார்.அனைத்து தரப்பு மக்களும் பயனடைக்கூடிய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பட்ஜெட் ஆகும். இருந்தாலும் பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
Also Read: காங்கிரஸ் கட்சி ஊழலை பற்றி பேசலாமா..! - நிர்மலா சீதாராமன் விளாசல்
எதிர்கட்சிகள் கூறுவது போல் இது தேர்தலுக்கான பட்ஜெட் தான். ஏன் என்றால் ஏழை எளிய மக்களுக்கு போடப்பட்ட பட்ஜெட். அதனால் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எச். ராஜா குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு மூன்று மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதித்தார்கள். அங்கே கலவரம் நடக்கவில்லை. திட்டமிட்டே தேசிய அமைப்புகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக சீமானும் திருமாவளவனும் ஊர்வலம் நடத்த அனுமதித்தார்கள்.இந்து அமைப்புகளுக்கு எதிராக அரசு செயல்படுகிறது.உயர் நீதிமன்றத்தை தீர்ப்பை காவல் துறை அதிகாரிகளும் அரசு பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
2024 இல் தேசிய அளவில் விடியல் ஆட்சி அமையும் என தமிழக முதல்வர் கூறியிருப்பதற்கு ஐயோ பாவம். ரோட்டில் எத்தனை பேர் அடிவாங்க போராறாங்க தெரியலை. அமைச்சர்கள் கட்சி காரர்களையும் மக்களையும் அடிக்கிறார்கள். இவர்களுக்கு ஈரோட்டில் மக்கள் பதில் கொடுப்பார்கள்.இதுவிடியாத ஆட்சி என்பதே சரி என ராஜா தெரிவித்தார்.
பேனா சின்னம் குறித்த கேள்விக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் வைக்கக்கூடாது. எத்தனை இந்து விரோதமாக ஆபாசமாக எழுதிய பேனாவுக்கு ஒரு நினைவு சின்னமா. இந்துக்களுக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா.என கேள்வி எழுப்பினார்.
அதானி பிரச்சனையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்து தான் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமைதியாகி விட்டன என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, DMK, HRaja, Puducherry