ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சமூக வலைதளங்களில் அநாகரீக விமர்சனம் செய்தால் நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழிசை !

சமூக வலைதளங்களில் அநாகரீக விமர்சனம் செய்தால் நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த தமிழிசை !

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை

இணைய விமர்சர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல என தமிழிசை காட்டம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சமூக வலைதளங்களில் அநாகரீக முறையில் விமர்சனம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்த ஆளுநர் தமிழிசை, அதை செய்பவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம் என எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் சார்பில் மோடி 20 மற்றும் அம்பேத்கரும் மோடியும் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா காமராஜ் மணிமண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை புத்தகங்களை வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க :  புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை - நாராயணசாமி திட்டவட்டம்

நிகழ்ச்சில் பேசிய ஆளுநர் தமிழிசை, பிரதமர் மோடி பற்றிய புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசைஞானி இளையராஜா கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், புத்தகத்தை படிக்காமல் விமர்சிப்பது தவறு. முதலில் புத்தகத்தை படியுங்கள். இணைய விமர்சகர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். தமிழ் பெருமை சேர்க்கும் மொழி. அதில் அநாகரீகமாக விமர்சிக்க வேண்டாம். அநாகரீக விமர்சனங்களை தொடர்ந்தால், அதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை எச்சரித்தார்.

First published:

Tags: Dr tamilisai soundararajan, Ilayaraja, Internet, Netizens criticized, Tamilisai Soundararajan