Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

யானை லஷ்மி தன்னுடன் விளையாடியதை நினைத்தால் கண்ணீர் வருகிறது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உருக்கம்

யானை லஷ்மி தன்னுடன் விளையாடியதை நினைத்தால் கண்ணீர் வருகிறது - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உருக்கம்

யானை லஷ்மியுடன் விளையாடிய தமிழிசை

யானை லஷ்மியுடன் விளையாடிய தமிழிசை

யானை லஷ்மியின் இறுதி ஊர்வலத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்ததை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளதாக தமிழிசை செளந்தரராஜன் உருக்கம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லஷ்மி தன்னுடன் விளையாடியதை நினைத்தால் தற்போது வருத்தமாக இருப்பதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லஷ்மி இன்று காலை நடை பயிற்சி போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதனை நடை பயிற்சிக்கு கொண்டு வந்த யானை பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு வரும்போது யானை திடீரென்று நடை தடுமாறி அருகிலுள்ள ஒரு கார் மீது இடித்து தந்தத்தால் காரை குத்தி மயங்கி விழுந்து உயிரிழந்தது.

யானை லஷ்மியின் இழப்புக்கு புதுச்சேரியே சோகத்தில் மூழ்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் யானையின் உடலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தி வந்தனர். யானை லட்சுமியின் உடலுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானை லட்சுமியை தனது தோழி போல பாவித்து வந்ததாகவும் தமிழிசை உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

லஷ்மியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை

இதையும் படிங்க: கால் தளர்ந்தது.. சரிந்தது.. மணக்குள விநாயகர் கோயில் யானையின் கடைசி நிமிடங்கள்... சிசிடிவி வீடியோ!

இந்த நிலையில் மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் இறுதிச் சடங்கு பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், லஷ்மி யானை தற்போது இல்லாததை கண்டு வருத்தமாக இருப்பதாகவும், மணக்குள் விநாயகர் கோவிலுக்கு சென்றாலே லஷ்மி தன்னுடன் விளையாடியதை எண்ணி நெகிழ்ச்சி அடைந்து இருந்தாகவும், தற்போது யானை இல்லாதது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் யானை லஷ்மியின் இறுதி ஊர்வலத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்ததை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும், யானையின் உயிரிழப்பை நாங்கள் கடந்து வர சீரமப்படுவதாகவும், நேற்று காலை கூட மணக்குள் விநாயகர் கோவிலுக்கு சென்றதாகவும் அப்போழுதும் கூட யானை லஷ்மியை கேட்டதாகவும், ஆனால் 8மணிக்கு மேல் யானை இருப்பிடத்திற்கு சென்று விட்டதாக கூறியாதாக கூறிய தமிழிசை அதிகாலையில் இந்த செய்தியை கேட்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை என உருக்கமாக பேசினார்.

First published:

Tags: Dr tamilisai soundararajan