ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

எனக்குத் தெரியும் நானும் டாக்டர் தான்..! அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் - ஊழியர்கள் இல்லாததால் தமிழிசை ஆத்திரம்

எனக்குத் தெரியும் நானும் டாக்டர் தான்..! அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் - ஊழியர்கள் இல்லாததால் தமிழிசை ஆத்திரம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை திடீர் ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகள் மூன்று மாதத்திற்குள்  சரி செய்யப்படும் என பேட்டியளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என பொதுமக்கள் தொடங்கி, பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா அவசர சிகிச்சை பிரிவு மூடிய நிலையிலேயே உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் ஆஞ்சியோகிராம் மிஷின், ஆம்புலன்ஸ், மாத்திரைகள் எவையும் பொது மக்களுக்கு சரிவர கிடைத்ததில்லை குற்றச்சாட்டுகள் உள்ளது.

  இந்த தகவலை அறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அப்பொழுது அல்ட்ரா சவுண்ட் மையத்தில் ஊழியர்கள் இல்லாமல் பூட்டி இருந்ததை கண்ட அவர்  சிறிது நேரம் காத்திருந்து திறக்கப்படுமா என நின்றிருந்தார். ஆனால் திறக்காமல் இருந்ததை கண்ட அவர் ஆவேசம் அடைந்து அதிகாரியிடம் கடிந்து கொண்டார்.

  அதைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் ஆம்புலன்சில் இருந்து நோயாளியை ஊழியர்கள் இல்லாமல் உறவினர்களே இறக்கி ஸ்ட்ரக்சரில் கொண்டு செல்லும் காட்சியும் அவர் கண்டார். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியரிடமும், அதிகாரியிடமும் இதுகுறித்து விசாரித்தார். அதேபோல் ஊழியர்கள் இல்லாமல் இதுபோன்ற நிலை ஏற்பட காரணம் என்னவென்று சுகாதாரத்துறை இயக்குனரிடமும் விசாரித்தார்.

  அதனைத் தொடர்ந்து செய்திகளுக்கு  பேட்டி அளித்த தமிழிசை, "அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அதனை நான் ஒப்புக் கொள்கிறேன். இதனை நிவர்த்தி செய்ய நாளை அனைத்து கல்லூரி முதல்வர்களும், மருத்துவமனை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளேன்.

  சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக 5 கோடி ரூபாயில் ஆஞ்சியோகிராம் இயந்திரம் பொருத்துவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். அது ஒன்றரை மாதத்திற்குள் பொருத்தப்படும்.

  எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், தனியார் மருத்துவமனையில் இருப்பது போன்று அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது. சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை அரசு மருத்துவமனை அதனை சரியான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் நான் மருத்துவராக இருப்பதினால் இதனை சரி செய்யப்படும்" என தெரிவித்தார்.

  இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரம் இந்த 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

  இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் ஆளுநர் தமிழிசையிடம், " புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும் என்று கூறும் நீங்கள் மருத்துவமனை உயிர் காக்கும் பொருட்களை வாங்குவதற்கும் சரி செய்வதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் ஏன் எனவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்" என கேள்வி எழுப்பினர்.

  அதற்கு ஆளுநர் தமிழிசை ஆவேசம் அடைந்து, "எனக்குத் தெரியும் நானும் டாக்டர் தான் எதையெல்லாம் சீக்கிரம் செய்ய முடியுமோ அவை சீக்கிரம் சரி செய்யப்படும். சரி செய்வதற்காக நான் மருத்துவமனையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக வந்துள்ளேன். ஆனால் என்னிடமே இது போன்ற கேள்விகள் கேட்கலாமா" என பதில் கூறினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Puducherry, Tamilisai Soundararajan