ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

வேகாத சோறு குமுறிய மாணவர்கள்.. மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சர் - ஸ்பாட்டிலே பறந்த உத்தரவு

வேகாத சோறு குமுறிய மாணவர்கள்.. மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த அமைச்சர் - ஸ்பாட்டிலே பறந்த உத்தரவு

அமைச்சர் நமச்சிவாயம்

அமைச்சர் நமச்சிவாயம்

Puducherry : அரசுப்பள்ளியில் வழங்கும் மதிய உணவு தரமானதாக இல்லை என புகார் எழுந்ததையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கொடாத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுப்பட்டுள்ளன இதனை கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்வின் போது மாணவர்களிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மதிய உணவு சரியில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

மதிய உணவில் வழங்கப்படும் முட்டை நிறுத்தப்பட்டுள்ளதாகவும்  அரசின் இலவச பேருந்து இயக்கப்படாத காரணத்தினால் தினமும் பேருந்துக்கு ஒரு பெரிய தொகை செலுத்துவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர். விரைவில் இலவச பேருந்து விடப்படும்.மதிய உணவில் முட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை எடுத்து வரச்சொல்லி அமைச்சர் நமச்சிவாயம் அதனை சாப்பிட்டு பார்த்தார். அதனை உடனிருந்த ஆசிரியர்களிடம் கொடுத்தார். அவர்களும் சாப்பிட்டு உணவு வேகவில்லை என தெரிவித்தனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை தினமும் பரிசோதிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம், “மதிய உணவு சுவையாக, தரமாக இல்லை என மாணவர்கள் புகார் கூறியதையடுத்து சாப்பிட்டு பார்த்தேன். உணவு வேகவில்லை.உணவில் குறைபாடு இருக்கிறது. இதுபற்றி  அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Also Read:  நீ நல்லா இருப்பா.. கலெக்டரை ஆசிர்வதித்த வயதான பெண் - வைரலாகும் வீடியோ

உணவுடன் முட்டையும் விரைவில் வழங்கப்படும்.விரைவில் சீருடை வழங்கப்படும் என்றும் மாணவர்களுக்கு இலவச பேருந்து விரைவில் இயக்கப்படும்.பேருந்தை இயக்க அனுமதி பெற்றவர்கள் போக்குவரத்து துறையில் வாகனத்தை காண்பித்து தரச்சான்றிதழ் பெற வேண்டியதான் பாக்கி என அமைச்சர் கூறினார்.

இதனை தொடர்ந்து  மாலையே கல்வி துறை அதிகாரிகளை உணவை தயாரித்து அளிக்கும் அட்சய பாத்திரா நிறுவன அதிகாரிகளுடன் மாலையில் ஆலோசனை நடத்தி தரமான உணவை வழங்க வலியுறுத்தினார். கல்வித்துறை செயலர் ஜவஹர், இயக்குனர் ருத்ர கெளடு மற்றும் அக்‌ஷய பாத்ர அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அரசு அளித்து வருகிறது. மேலும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப் பை, மிதிவண்டி, லேப்டாப், காலனி போன்றவற்றை வழங்கி வருகிறது. காலையில் சூடான பால், மதியம் கலவை உணவு போன்றவற்றை அளித்து வருகிறது. மதிய உணவை பெங்களூரை சேர்ந்த  அட்சய பாத்திரா என்ற நிறுவனம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவர்கள் சைவ உணவு மட்டுமே அளித்து வருகிறார்கள். இதனால் மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை நிறுத்தப்பட்டது. விரைவில் முட்டையை தனியாக வழங்க கல்வி துறை ஏற்பாடு செய்து வருகிறது.

Published by:Ramprasath H
First published:

Tags: Mid Day Meal, Puducherry, School students