Home /News /puducherry /

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளி மூடலா..? புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளி மூடலா..? புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் போராட்டம்

பள்ளி மாணவிகள் போராட்டம்

பள்ளி மாணவிகள் போராட்டம்

Government School : புதுச்சேரியில் 600 மாணவர்கள் படித்து வரும், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியை மூடிவிட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை வேறு அரசு பள்ளியுடன் இணைக்க புதுச்சேரி பள்ளி கல்வி துறை முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளியை, பள்ளி கல்வி துறை மூடபோவதாக மாணவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் காவலர் குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் கடந்த காலங்களில் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், தற்போது 600 மாணவர்கள் மட்டுமே இந்தப் பள்ளியில் படித்து வருவதால் இதை மூடிவிட்டு, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு அரசு பள்ளியுடன் இணைக்க புதுச்சேரி பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Must Read : மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கையை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்! - குவியும் பாராட்டு

இந்தத் தகவலை அறிந்த  இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100 க்கும் மேற்பட் மாணவ-மாணவிகள், தங்களின் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, பள்ளி வாயிலில் அமர்ந்து தாங்கள் படிக்கும் பள்ளியை மூடும் முடிவை பள்ளி கல்வி துறை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Published by:Suresh V
First published:

Tags: Government school, Puducherry, School students

அடுத்த செய்தி