ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கொட்டி தீர்த்த மழை... வைப்பர் இல்லாமல் தவித்த அரசு பேருந்து ஓட்டுநர்.. பயணிகள் திக்திக் பயணம்

கொட்டி தீர்த்த மழை... வைப்பர் இல்லாமல் தவித்த அரசு பேருந்து ஓட்டுநர்.. பயணிகள் திக்திக் பயணம்

அரசு பேருந்து அவலம்

அரசு பேருந்து அவலம்

பேருந்தின் அவல நிலையை அதில் பயணித்த பயணி ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரியில் வைப்பர் செயல்படாததால் வெளுத்து வாங்கிய மழையில் பேருந்தை ஒட்ட திணறிய ஓட்டுநரின் நிலை பயணிகளை பதட்டத்திற்கு உள்ளாக்கியது.

  புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில்

  புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே 8 பேருந்து இயக்கப்படுகிறது. அரசு பேருந்துகள் சரிவர பராமரிப்பு பணிகள் செய்யப்படாமல் இருப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது.

  இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து காலை 5.40 மணிக்கு சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்லும் பேருந்து இயக்கப்பட்டது. அப்போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது. பேருந்தில் வைப்பர் வேலை செய்யாததால் பேருந்து இயக்குவதில் டிரைவர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். கையில் காகிதத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது கண்ணாடியை துடைத்தவாறு பேருந்து இயக்கியுள்ளார்.

  Read More : "ஒற்றை ஓநாய் தாக்குதல்" முறையில் கோவை கார் வெடிப்பு சம்பவம்: - தமிழ்நாடு காவல்துறை தகவல்

  இருந்தபோதிலும் மழை அதிக அளவில் பெய்ததால் சாலை முழுவதும் தெரியாத நிலை ஏற்பட்டது. பேருந்தை சிறிது நேரம் நிறுத்திவிட்டு கண்ணாடியை துடைத்த பிறகு இயக்கினார். இதனை அறிந்த பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். பேருந்து நடத்துநர் கண்ணாடியை துடைத்தப்படியே இருந்தார்.

  இது தொடர்பான வீடியோவை பேருந்தில் பயணித்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அரசு உடனடியாக கவனம் செலுத்தி பேருந்துகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Bus, Heavy rain, Puducherry