புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி சட்டமன்றத்தில் இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, மாலையில் சிறுதானிய சிற்றுண்டி, முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு போன்ற பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிக்க : சம்பளத்தின் ஒரு பகுதியை பறவைகளுக்கு ஓதுக்கும் புதுவை இன்ஸ்பெக்டர்..
மேலும் சுனாமி நினைவிடம், கடலுக்கடியில் பூங்கா, பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் கருவிகள் போன்ற திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. முக்கியமான அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அவை நடவடிக்கையை சபாநாயகர் செல்வம் நாளை வரை ஒத்திவைத்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Budget Session, Puducherry, Subsidised Gas