முகப்பு /செய்தி /புதுச்சேரி / செயலியில் ஆபாச பேச்சு.. நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

செயலியில் ஆபாச பேச்சு.. நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மொபைல் ஆப் மூலம் மோசடி

மொபைல் ஆப் மூலம் மோசடி

Puducherry | செல்போன் செயிலி மூலம் வாலிபர்களிடம் ஆபாசமாக பேசி அவர்களை தனிமையில் வரவழைத்து பணம் பறித்த  மூன்று பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (27), இவர் வில்லியனூர் பகுதியில் ஒர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு உறுவையாறு சாலையில் இவரிடம்  4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 400 பணம் மற்றும் ஏ.டி.எம் கார்ட்டை பறித்து அதில் இருந்த ரூ.8,000 பணத்தை எடுத்து சென்றதாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் மங்கலம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் தீபனிடம் நடத்திய விசாரணையில் "கிண்டர் கே சாட்" என்கிற செயலி மூலம் சிலர் அவரிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.  அவரை தனிமைக்கு அழைத்ததாகவும் வர மறுத்ததால் அவர்கள் அவரின் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களின் அழைப்பின் பேரில் வில்லியனூர் உறுவையாறு சாலை சுடுகாடு அருகே சென்றுள்ளார்.

அப்போது மூககவசம் அணிந்தவாறு

வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும்  ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதில் பணம் எடுத்து வரும் ஒருவரை அடையாளம் கண்டதில் அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமு என தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் செயலி மூலம் அவருடன் சேர்ந்து பண பறிப்பில் ஈடுப்பட்டது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், முகிலன் மற்றும் பிரகாஷ் என தெரியவந்தது.  இதையடுத்து விஜயகுமார், முகிலன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.6,000 பணம் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,

தொடர்ந்து இவர்கள்  செயலி மூலம் வேறு யார் யாரிடம் இது போன்று பண பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் தலைமறைவாக உள்ள பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Also see... ஆ.ராசா குறித்த கேள்வியால் அப்செட் ஆன மதுரை ஆதீனம்…

இந்த செயலி மூலம் ஏமார்ந்து பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்ற அபாயகரமான செயலிகளை பயன்படுத்தினால் சமூக விரோதிகளால் இளைஞர்கள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதாக பாதிகப்படுவார்கள். எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Cheating case, Crime News, Puducherry