ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அக்டோபர் 1 முதல் சாலையில் மீன்களை ஏலம் விடவும் விற்கவும் தடை.. புதுச்சேரியில் அதிரடி உத்தரவு

அக்டோபர் 1 முதல் சாலையில் மீன்களை ஏலம் விடவும் விற்கவும் தடை.. புதுச்சேரியில் அதிரடி உத்தரவு

சாலைகளில் மீன் விற்பனைக்கு தடை

சாலைகளில் மீன் விற்பனைக்கு தடை

Puducherry | புதுச்சேரியில் வரும் ஒன்றாம் தேதி முதல் நகரின் மையத்தில் மீன் ஏலம் நடத்தவும் சாலைகளில் மீன் விற்பனைக்கும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் 18 மீனவ பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் நகரின் மையத்தில் உள்ள நேரு வீதி-காந்தி வீதி சந்திப்பில் ஏலம் நடத்தப்படும். இதனை தவிர்க்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி திறந்து 4 ஆண்டுகள் ஆகியும் யாரும் அதை பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி(Smart city) திட்டத்தின் கீழ் குபேர் அங்காடி நவீனப்படுத்தப்படுவதால் மீன் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலை நவீன அங்காடிக்கு அரசு மாற்றியது.

ஆனால் கால அவகாசம் கேட்டு மீனவர்கள் தள்ளி போட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள உத்தரவில்,” சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கூறிய சில வழிகாட்டுதல்களின்படி, காந்தி வீதியில் குபேர் மீன் மார்க்கெட் முன்பு வருகிற 1-ம் தேதி முதல் மீன் ஏலம் விடுவதற்கு தடை செய்யப்படுகிறது.  இதே போல் சாலை ஓரத்தில் வைத்து மீன்களை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மீன் விற்பனை செய்யும் பெண்கள் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வைத்து தான் விற்பனை செய்ய வேண்டும்.

இது தொடர்பாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள சந்தைகளில் மட்டும்தான் மீன்களை விற்பனை செய்ய வேண்டும். மீன்களை ஏலம் விடுவது அதிநவீன மீன் அங்காடியில் மட்டும்தான் ஏலம் விட வேண்டும். குபேர் அங்காடியில் சில்லறை விற்பனையை காலை 6 மணிக்கு மேல்தான் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்.

Also see...திருப்பதி பிரம்மோற்சவம் முதல் நாள் விழா...

எனவே அனைத்து நாட்களும் மீன் அங்காடியை காலை 6 மணிக்கு தான் திறக்க வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள், பொருட்கள், மீன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Fish, Puducherry