ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுவையில் முதல் மரபணு ஆய்வகம் திறப்பு.. கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக தெரிந்துவிடும்...

புதுவையில் முதல் மரபணு ஆய்வகம் திறப்பு.. கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக தெரிந்துவிடும்...

 மரபணு ஆய்வகம்

மரபணு ஆய்வகம்

Puducherry News : புதுவையில் முதல் மரபணு ஆய்வகத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை, முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளை கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன. ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா கிருமியை சரியாக கண்டறிய முடியும்.

எந்த உருவம் எந்தவொரு கிருமி மாறினாலும் அதனை இந்த ஆய்வகம் மூலம் கண்டறிந்து விடலாம். மரபணு பகுப்பாய்விற்கு பிற மாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய தேவை தவிர்க்கப்படும். இந்த ஆய்வகம் ஒரு இணைப்பு மையமாக செயல்பட்டு புதுவை, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை செய்யும்.

இதையும் படிங்க : யானை லட்சுமிக்கு 30ம் நாள் காரியம் செய்த புதுவை மக்கள்..

இந்த நவீன ஆய்வகம் கொரோனாவுக்கு மட்டுமின்றி, வரும் காலங்களில் எந்த கிருமிகள் மூலம் தொற்று ஏற்பட்டாலும், இதர பல கிருமிகளை பற்றியும் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சோதனைக்கு கடந்த காலங்களில் மாதிரிகள் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் முடிவு கிடைக்க 10 முதல் 15 நாட்கள் வரை ஆனது. ஆனால் இப்போது இரண்டு முதல் மூன்று நாட்களில் பரிசோதனை முடிவுகளை அறியலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இந்த ஆய்வகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ளலாம். இதுதான் புதுவையில் அமைக்கப்பட்ட முதல் மரபணு ஆய்வகம் ஆகும்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry