ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பிஃபா இட்லி கேள்விப்பட்டிருக்கீங்களா..? புதுச்சேரியில் வாடிக்கையாளர்களை கவர ஹோட்டல் புது முயற்சி

பிஃபா இட்லி கேள்விப்பட்டிருக்கீங்களா..? புதுச்சேரியில் வாடிக்கையாளர்களை கவர ஹோட்டல் புது முயற்சி

பிஃபா இட்லி

பிஃபா இட்லி

Puducherry News : . உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்துள்ள FIFA இட்லிக்கென தனி அச்சு தட்டு வாங்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

உலகிலுள்ள அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் மிக அதிகமான ரசிகர்களை கொண்டது கால்பந்தாட்ட போட்டி. தலைமுறைகளை கடந்து பயணித்து வரும் இப்போட்டிக்கான உலகக்கோப்பை தொடர்  நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

தற்போது  உலக கோப்பை போட்டி  கத்தாரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியை வரவேற்கும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் உலகம் முழுவதும் வித்தியாசமான படைப்புகள் மக்களுக்கு வைக்கப்படுகின்றன. இவற்றை கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

பிஃபா இட்லி

அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள சற்குரு ஹோட்டலில் "FIFA இட்லி" என்ற வித்தியாசமான உணவு வழங்கப்படுகிறது. உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாக ஈர்த்துள்ள FIFA இட்லிக்கென தனி அச்சு தட்டு வாங்கப்பட்டுள்ளது.

இதில் இட்லி மாவு ஊற்றி வேகவைத்து எடுத்தவுடன் அச்சில் வைத்து நெய் தடவி பொடி தூவி சுடச்சுட வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. உலக புகழ்பெற்ற கால்பந்தையும் உணவில் புகழ்பெற்ற இட்லியையும் இணைத்து உருவாக்கியுள்ள Fifa இட்லி மக்களின் விருப்ப உணவாகி விட்டது.

First published:

Tags: FIFA World Cup 2022, Local News, Puducherry