முகப்பு /செய்தி /புதுச்சேரி / காணாமல் போன பூனைக்காக காத்திருக்கும் குடும்பம்.. புதுச்சேரியில் போஸ்டர் ஒட்டி தேடும் உரிமையாளர்

காணாமல் போன பூனைக்காக காத்திருக்கும் குடும்பம்.. புதுச்சேரியில் போஸ்டர் ஒட்டி தேடும் உரிமையாளர்

பூனைக்காக காத்திருக்கும் குடும்பம்

பூனைக்காக காத்திருக்கும் குடும்பம்

Puducherry | காணாமல் போன பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரியில் டீ வியாபாரி அறிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நகரப்பகுதியில் காணவில்லை என்ற போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. காரணம் காணாமல் போனது பூனை என அந்த போஸ்டரில் இருப்பதுதான்.

இந்த விளம்பரத்தை காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்ற டீ வியாபாரி செய்துள்ளார். இவரது மனைவி சுகந்தி. இவர் அங்கன்வாடி ஊழியர் ஆவார். இவர்கள் தனது குடியிருப்பு பகுதியில் காணவில்லை என்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில் "குட்டூ" என அழைக்கப்படும் தனது பூனை 3ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது தொலைபேசி எண்ணையும் அத்துடன் அவர் இணைத்துள்ளார்.

சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்த இந்தப் பூனையை தனது மகள் புதுச்சேரிக்கு கொண்டு  வந்து வளர்த்து வருவதாகவும் கடந்த 4 ஆண்டுகளாய் வீட்டிற்குள்ளே தான் பூனை இருந்து வந்ததாகவும் கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை என கவலையுடன் கூறுகிறார் ராமன்.

குடும்பத்தில் ஒருவர் காணாமல் போனது போல் செல்ல பிராணியான  பூனை வீட்டில் இல்லாததால்  அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.செல்ல பிராணி குட்டூ நிச்சயம் வீடு திரும்பும் என்ற நம்பிக்கையில் அதற்கான உணவு மற்றும் தண்ணீர் வைத்து ஒரு குடும்பம் காத்திருக்கிறது.

Also see...கேரளாவில் தெரு நாய் கடித்து 12 வயது சிறுமி உயிரிழப்பு

செல்லப்பிராணி பூனை காணவில்லை என ராமன் ஒட்டியுள்ள போஸ்டரை பார்த்த பலரும் அதனை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி பூனையை கண்டுபிடிக்க உதவுமாறு கோருவது வைரலாகியுள்ளது.

First published:

Tags: Cat, Poster, Puducherry