ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்: தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை

மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்: தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மின் சாதன பொருட்களை சேதப்படுதியதாக மின்துறை துறை ஊழியர்கள் 10 மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  மக்கள் பாதிக்கப்படும் வகையில் மின்துறை ஊழியர்கள் போராடினால், எஸ்மா சட்டம் பாயும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 5வது நாளாக புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

  மரப்பாலம் துணை மின் நிலையத்திற்குள் நுழைந்து ஒப்பந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அங்கிருந்த மின் சாதன பொருட்களை சேதப்படுதியதாக மின்துறை துறை ஊழியர்கள் 10 மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதையும் படிங்க: எனது மகனை பழிவாங்க வேண்டாம் - முதல்வர் ஸ்டாலினுக்கு சவுக்கு சங்கரின் தாயார் கடிதம்

  இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அத்துமீறி துணை மின் நிலையங்களில் நுழைந்து மின்சாரத்தை துண்டித்தது விஷமத்தனமான செயல் என்றும், இனி அரசு வேடிக்கை பார்க்காது என்றும் கூறினார். பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார். போராட்டத்தை கைவிட்டு விட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Pudhucherry, Tamilisai Soundararajan