ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம்.. மின்துறை எச்சரிக்கை

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம்.. மின்துறை எச்சரிக்கை

மின்சாரம் தாக்கி

மின்சாரம் தாக்கி

Puducherry | புதுச்சேரியில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் என்று மின்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மழைக்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொடக்கூடாது போன்ற பல்வேறு வழிமுறைகளை புதுச்சேரி மின்துறை அறிவித்துள்ளது.

மழைக்காலங்களில் மின் விபத்தை தவிர்க்க மக்கள் மின் கம்பங்களில் பந்தல், கொடி கம்பி, கயிறு கட்டக்கூடாது, ஆடு மாடுகளை கட்டக்கூடாது, மின்சார மேல்நிலை கம்பிகளுக்கு அருகே உள்ள மரங்களை அகற்ற மின்துறையை அணுக வேண்டும்.

மின்னல் தாக்கும் போது தண்ணீரில் தேங்கிய பகுதிகளில் நிற்கக்கூடாது, டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன்கள், பயன்படுத்தக் கூடாது, மின்சாதன பொருட்களை பிளக்கில் இருந்து அகற்றி வைக்க வேண்டும். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொடக்கூடாது போன்ற பல்வேறு வழிமுறைகளை புதுச்சேரி மின்துறை அறிவித்துள்ளது.

Also see... வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

பொதுமக்கள் மின்துறைக்கு தகவல் தெரிவிக்க 1800 425 1912 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுடைய தகவலை மின்துறைக்கு தெரிவிக்கலாம் என்றும் மின்துறை அறிவித்ஹ்டுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Electricity, Puthucherry