ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

புதுச்சேரி மீது தலைவருக்கு பாசம் உண்டு. அதே பாசம் புதுச்சேரியின் மீது எனக்கும் உண்டு" என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி திமுக அவைதலைவர் எஸ்பி சிவக்குமாரின் மகன் திருமண விழாவில் தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், “புதுச்சேரியில் நடந்த நாடகத்தில் கலைஞர் நடித்தபோது ஒரு கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் தலைவர் கலைஞர் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து தந்தை பெரியார் வந்து மருந்து போட்டு ஈரோடு அழைத்து சென்றார். அங்கு குடியரசு பத்திரிகையில் பணியாற்றினார். அதனால் புதுச்சேரி மீது தலைவருக்கு பாசம் உண்டு. அதே பாசம் புதுச்சேரியின் மீது எனக்கும் உண்டு" என தெரிவித்தார்.

மேலும் “புதுச்சேரியில், கட்சியில் போட்டி இருக்க வேண்டும். பொறாமை இருக்க கூடாது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி தேவை. எனக்கு அந்த ஆசை தான். கடந்த தேர்தலில் வாய்ப்பு இருந்தது. ஆனால் தவறி விட்டது பராவாயில்லை. இங்கு ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி வரும்.. நிச்சயமாக வரும்.. புதுச்சேரியில் மதவாத ஆட்சி வரகூடாது..” இவ்வாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Puducherry