Home /News /puducherry /

தன்மானத்துடன் வாழ பாஜகவை விட்டு திமுகவிற்கு வாருங்கள்... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு...

தன்மானத்துடன் வாழ பாஜகவை விட்டு திமுகவிற்கு வாருங்கள்... புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு...

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Puducherry CM Rangasamy : பாஜக கூட்டணியில் தினமும் அவமானப்படும் முதலமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்து விட்டு திமுகவுடன் வந்தால் தன்மானத்துடன் வாழலாம் என திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா கூறியுள்ளார்.

புதுச்சேரியில்  திருபுவனை தொகுதி  திமுகவினரின் சார்பில் கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏழை எளியோருக்கு நல உதவிகளை திமுக அமைப்பாளர் சிவா, திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்பாளர் சிவா பேசுகையில்,  “புதுச்சேரியில் 8,000 காலி பணி இடங்கள் உள்ள நிலையில் ஒருவருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை.

ஆனால் முதலமைச்சர் எது நடந்தாலும் நடக்கட்டும் தனக்கு முதலமைச்சர் பதவிதான் தேவை என காலையும் மாலையும் அந்த சீட்டில் உட்கார்ந்து செல்கிறார். கடந்த ஒன்றே கால் ஆண்டுகளில் புதுச்சேரிக்கு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நான்குமுறை வந்துவிட்டனர். 50 மத்திய அமைச்சர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் ஒரு  திட்டமும் அறிவிக்கப்படவில்லை. எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் பத்து முறை ஆட்சியை கலைத்தது தான் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை என்றார்.

பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா பேசும்போது , “புதுச்சேரியில் டம்மி  முதலமைச்சர் ரங்கசாமியும்  சூப்பர் முதல்வராக தமிழிசையும் உள்ளனர். அரசு நிகழ்வுகளில் முதலமைச்சர் அவமானப்படுத்தப்படுகிறார். கோயில் திருவிழாவில் ஆளுநருக்கும் உள்துறை அமைச்சருக்கும் மரியாதை கொடுக்கும் போலீசார் முதலமைச்சரை தள்ளி விடுகிறார்கள்.



Also see... அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு

இதைவிட கேவலம் வேறு இருக்காது. இது முதலமைச்சருக்கு ஏற்பட்ட அவமானமில்லை. அவருக்கு வாக்களித்த புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக உடன் வாருங்கள். தன்மானத்துடன் வாழ திமுக உத்திரவாதம் அளிக்கும் என்று கூறினார்.

தமிழிசையை அங்கே சந்திரசேகர ராவ் விரட்டுகிறார். ஆனால் ரங்கசாமி  அடிமை சேவகம் செய்கிறார். இது புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். புதுச்சேரி மக்களின் அவமானத்தை திமுக போக்க கடமைப்பட்டுள்ளது என்றும் பேச்சாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்தார்..
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, DMK, Puducherry, Puthucherry cm

அடுத்த செய்தி