ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சிறு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத புதுச்சேரி சாலைகள்.. பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி

சிறு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத புதுச்சேரி சாலைகள்.. பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமான புதுச்சேரி சாலை

சேதமான புதுச்சேரி சாலை

Puducherry News : சிறு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகள்.. பல்லாங்குழியாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

வடக்கு கிழக்கு பருவம் மழை தொடங்கிய பின் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்துள்ளது. அதிலும் கனமழை ஏதும் இதுவரை பெய்யவில்லை. ஆனால் புதுவை சாலைகள் கனமழையினால் பாதிக்கப்பட்டவைப்போல் காணப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்குள் போடப்பட்ட சாலைகள் கூட இந்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளது. பல இடங்களில் சாலை பல்லாங்குழி ஆக மாறி உள்ளது.

குறிப்பாக புதிய பஸ் நிலையம் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையின் நிலைமை மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது.

சேதமான புதுச்சேரி சாலை

எங்கு பார்த்தாலும் சாலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய அளவிலான குழிகள் உள்ளது.

இதையும் படிங்க : புதுச்சேரியிலும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் ஸ்டாலின் பேச்சுக்கு நாராயணாசாமி பதில்!

பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சறுக்கி விழுந்து வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry