மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக் கிழமை) விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520 கிலோமீட்டர் தொலைவிலும், கரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.
தற்போது, இந்த மாண்டஸ் புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதன் காரணமாக வரும் 10ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone, Local News, Puducherry