Home /News /puducherry /

வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற அரசு பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு...

வீடு தோறும் தேசியக்கொடி ஏற்ற அரசு பள்ளி மாணவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு...

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் வடிவமைக்கும் கலைப்பொருள்

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் வடிவமைக்கும் கலைப்பொருள்

Puducherry | கிராமங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களான சோளம், இலை, தென்னை, குறும்பு, மூங்கில், மர பட்டைகளை கொண்டு செய்யப்பட்ட இந்த கலை படைப்பு"வீடு தோறும்  தேசியக்கொடி ஏற்றுவோம்" என்ற விழிப்புணர்விற்கு  மாணவர்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரியின் எல்லை கிராமத்தில் சத்தமின்றி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ஒரு அரசு பள்ளி.

புதுச்சேரியின் சேலியமேடு கிராமத்தில் இயங்கி வரும் வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் உருவாக்கும் கலை பொருட்கள் தற்போது பலரது பரிசு பொருட்களாக மாறி வருகிறது. கிராமப்புறத்தில் கிடைக்க கூடிய  வீணாகும் சுரக்காய் குடுவை, தென்னை, பனை மற்றும் வாழை மரங்களின் உலர்ந்த இலை,  பூ, மட்டைகளை கொண்டு கண்கவர் கலை படைப்புகளை மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

"அழிவின் உயிர்ப்பு” என்ற பெயரில் இப்பள்ளியில் இயங்கும் கலைக்கூடம் அசத்தும் கைவினைப் பொருட்களை உருவாக்கும் சுற்றுலா தளமாகவே மாறிவிட்டது. இந்த பயிற்சிப் பட்டறையில் மாணவ மாணவிகள் உருவாக்கும் வித்தியாசமான கலைப்படைப்புகள் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தக் கலை முயற்சிக்குப் பின்னணியில் உந்து சக்தியாக இருப்பவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி. அவரது பயிற்சியில் அடுத்து ஒரு படைப்பை மாணவர்கள் சந்தோஷ், நவநீதன் ஆகியோர்  உருவாக்கியுள்ளனர். கிராமங்களில் கிடைக்கக்கூடிய பொருட்களான சோளம், இலை, தென்னை, குறும்பு, மூங்கில், மர பட்டைகளை கொண்டு செய்யப்பட்ட இந்த கலை படைப்பு"வீடு தோறும்  தேசியக்கொடி ஏற்றுவோம்" என்ற விழிப்புணர்விற்கு  மாணவர்களால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.



Also see... நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் நோய்க்கு அதிகரிக்கும் உயிரிழப்பு

கொடியை முதியவர் ஏற்றுவதும், மற்றவர்கள் மரியாதை செய்வது போல் முப்பரிமாண முறையில்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கலைப் பொருள்  மற்ற மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Independence day, Puducherry

அடுத்த செய்தி