முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஆழ்கடலில் பேனர் வைத்த ஆதரவாளர்கள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு ஆழ்கடலில் பேனர் வைத்த ஆதரவாளர்கள்

ஆழ்கடலில் ரங்கசாமி பேனர்

ஆழ்கடலில் ரங்கசாமி பேனர்

Puducherry News : பேனர் தடை சட்டத்தை மீறி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு பிறந்நாள் வாழ்த்து பேனர்கள் அனேக இடங்களில் வைக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் ஆகஸ்டு 4ஆம் தேதி வருகிறது. அவரின் தொண்டர்கள் இந்த நாளை தீபாவளி, பொங்கல் போல உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இதற்காக புதுச்சேரி நகரம் மற்றும் கிராமம் முழுதும் ரங்கசாமிக்கு விதவிதமான பேனர்களை வைத்து ரசிப்பார்கள்.

உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நடிகர்கள், தென்னிந்திய நடிகர்கள் என பல ரூபங்களில் முதலமைச்சரை வடிவமைத்து அவர்கள் விளம்பரங்கள் வைப்பது வழக்கம். அதே போல ஆன்மிக பக்தரான ரங்கசாமியை வாழ்த்தும் விதமாக கடவுளுடன் ஒப்பிட்டும்  பேனர் வைப்பது வழக்கம்.

இதற்கு வேறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் வாழ்த்தும் பேனரும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகிறது. ஆனால் இந்த ஆண்டு ரங்கசாமியை யாருடனும் ஒப்பிடாமல் முகம் சுளிக்காத வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தாலும், போக்குவரத்துக்கு இடையூறாக நகரின் முக்கிய சந்திப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்தாலும் அரசியல் தலைவர்களின் பிறந்த நாளின் போது பேனர்கள் நகரை சுற்றி வைப்பது தொடர்கிறது. அதேபோல் தான் புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு, அண்ணாசாலை என முக்கிய சந்திப்புகளில் ரங்கசாமியின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பேனர்

இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், பேனர் வைக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் சமூக அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து மக்கள் வாழ்வுரிமை இயக்க மாநிலச் செயலாளர் ஜெகன்நாதன் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் 4 அன்று முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விளம்பர பேனர் மற்றும் கட்வுட்டுகள் இன்றி கொண்டாட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆழ்கடலில் வைக்கப்பட்ட பேனர்

திறந்த வெளி விளம்பரங்கள் மற்றும் பேனர்கள் தடைச் சட்டம் 2009- மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தடை ஆணைகளை பின்பற்றவும், பிறந்தநாள் கொண்டாடும் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கட்சியினர் சாலைகளை அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், சுற்றுச்சூழலை கெடுக்கும், விளம்பர பேனர் மற்றும் கட்-அவுட்டுகள் போன்றவைகளை தவிர்த்து, பிறந்த நாள் கொண்டாட வேண்டி மனு அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Must Read : தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த கல்லூரி மாணவன் கைது... ஆம்பூரில் பரபரப்பு

இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய இருப்பதாகவும் ஜெகன்நாதன் தெரிவித்துள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆழ்கடலுக்குள்ளும் வாழ்த்து பேனரை அவரது தொண்டர்கள் வைத்துள்ளனர். ரங்கசாமியின் ஆதரவாளர்கள்  ஆழ் கடலுக்குள் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிட தக்கது.

First published:

Tags: Banners, Birthday, Puducherry