முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு.. தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பாராட்டு..

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு.. தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பாராட்டு..

தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி

தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி

Puducherry News : சௌந்தரராஜன் தான் பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

தமிழக பாரதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கே பல்வேறு பணிகளை ஆளுநராக மேற்கொண்ட வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கு பதிலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த 2 ஆண்டுகளில் அவர் செய்த பணிகள் மற்றும் மக்கள் நல விஷயங்கள் குறித்து மாதம்தோறும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் கொடுத்து வருகிறார். இதேபோல் தெலங்கானா மாநிலத்திலும் அவர் செய்து வரும் பணிக்கான கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றுடன் 2 ஆண்டுகள் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை பதவியேற்று நிறைவு பெறுகிறது. 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழிசைக்கு அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜக, அதிமுக கட்சி சார்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இன்று புதுச்சேரியில் உள்ள மனகுல விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவனம் பதிப்பித்துள்ள “புதுச்சேரியில் உயிரின வகைகளின் பன்முகத் தன்மை“ நூல் வெளியீட்டு விழா துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் குர்மீத் சிங், தேசிய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் திரீத்தி பானர்ஜி மற்றும் விஞ்ஞானிகள், அதிகாரிகள் முன்னிலையில் நூலை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆற்றிய உரையில், “புதுச்சேரியின் இயற்கை வளங்களை கண்டறிந்து தொகுத்து வழங்கியிருப்பதற்காக முதலில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இயற்கை புதுச்சேரிக்கு பல கொடைகளை தந்திருக்கிறது. அண்மையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற தேசிய குறியீடுகளின் அடிப்படையில் புதுச்சேரியில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த பெருமை அரசு நிர்வாகத்தையும் புதுச்சேரி மக்களையும் சேரும். தடுப்பூசியை எடுத்துக்கொள்வதிலும் மற்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதிலும் புதுச்சேரி மக்களின் திட்டமிட்ட வாழ்க்கை முறையின் பயனாக இந்த சாதனையை அடைய முடிந்தது.

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையில் இருக்கும் உறவு அத்தகையது.  பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் புதுச்சேரி நல்ல வளர்ச்சி அடையும். பசுமை பொருளாதாரம், கடல்வள பொருளாதாரம் போன்றவற்றின் பயனாக நாடு 5வது பொருளாதார வல்லரசு நிலையிலிருந்து 3வது பொருளாதர வல்லரசு நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி பாதையில் புதுச்சேரி ஒரு குறிப்பு தகுந்த இடத்தைப் பிடிக்கும். அதற்காகவே நாம் அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

First published:

Tags: BJP, Puducherry, Tamilisai Soundararajan