ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ரூ.100 கோடி வரை பந்தயம்.. பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் நடந்த பிரமாண்ட சேவல் சண்டை..! 

ரூ.100 கோடி வரை பந்தயம்.. பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் நடந்த பிரமாண்ட சேவல் சண்டை..! 

சேவல் சண்டை

சேவல் சண்டை

Pongal Festival 2023 : புதுச்சேரி- ஆந்திர எல்லையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சேவல் சண்டை போட்டியில் பந்தய பணமாக ரூ.100 கோடி வரை பந்தயம் கட்டப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர எல்லையில் உள்ளது. இதன் அருகே ஆந்திர மாநில கோதாவரி படுகையில் மும்முடிவரம் தொகுதியில் ஜியோர்ஜிபேட்டா என்னும் கிராமத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சேவல் பந்தயம் நடத்தப்படுவது முக்கியமான சிறப்பு அம்சம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் பணம் கட்டி நடத்தப்பட்டு வந்த இந்த சேவல் பந்தயம், தற்போது கோடிக்கணக்கில் பணம் கட்டி பகிரங்கமாக நடத்தப்படுகிறது.

கட்சி பாகுபாடு இன்றி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முதல் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என சினிமா பிரமுகர்களும் நேரடியாகவே இந்த சேவல் பந்தயங்களில் கலந்துகொள்கின்றனர். ஒரு போட்டியில் 5 ரூபாய்  முதல் 10 லட்சம் ரூபாய்  வரை பந்தயம் கட்டப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சேவல் சண்டை நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. 10 ஏக்கர் பரப்பிலான  மைதானத்தில் இந்த பந்தய போட்டி நடைபெற்றது. இதற்கான மைதானம் 3 ஏக்கர் பரப்பளவிலும் வாகனங்கள் நிறுத்துமிடம் 7 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் போட்டியில் புதுச்சேரியில் ஏனாம் பகுதி, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திராவை சேர்ந்த சேவல்கள் போட்டிக்கு வந்தன.

ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்த சேவல் சண்டை பந்தயத்தில் ரூ.100 கோடி அளவில் பணம் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த சேவல் பந்தயங்களில் போலீசார் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்து எந்தவித பிரச்சனைகளும் நேராமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. சேவல் சண்டையின்  காரணமாக புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன.

First published:

Tags: Local News, Pongal 2023, Puducherry