Home /News /puducherry /

ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி!

ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி!

 பிரதமரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி

பிரதமரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி

சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசின் கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என பிரதமரை முதல்வர் ரங்கசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்கள் கடந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லி  சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அவர் அளித்த மனுவில், புதுச்சேரியில் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு உதவியதற்காக மத்திய அரசுக்கு நன்றி. மத்திய உதவித்தொகை 2021-2022ல் ரூ.1,874 கோடிகள் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 10,414 (2021-2022) இருந்தது.  நடப்பு ஆண்டிற்கு அதாவது 2022-2023ம் ஆண்டுக்கான மத்திய உதவியாக ரூ.1,724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, அதாவது கடந்த ஆண்டை விட ரூ.150 கோடி குறைவு என குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதுச்சேரியில் அரை சதவீத வரிகள் வெகுவாக குறைந்துள்ளன. டெல்லியை போல புதுச்சேரி நுகர்வு மாநிலம் அல்ல. ஜிஎஸ்டி இழப்பை நீட்டிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்தால் குறைந்தபட்சம் நடப்பாண்டில் ரூ. 2000 கோடி குறையும். 7வது ஊதியக் குழுவை அமல்படுத்திய பிறகு புதுச்சேரி அரசு அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ.186.50 கோடியை வழங்க வேண்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.



இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளாதார். இந்த சந்திப்புகள் தொடர்பாக முதல்வர் தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நடப்பாண்டு ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்காவிட்டால் மத்திய அரசு கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி அவசியமாக தேவை. மத்திய அரசு உதவி கடந்தாண்டி ரூ. 1874 கோடியாக இருந்தது. இது நடப்பாண்டு ரூ. 1724 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது தோராயமாக கடந்த ஆண்டை விட 150 கோடி ரூபாய் குறைவு.

மத்திய அரசின் கூடுதல் உதவியாக ரூ.2000 கோடி வழங்காவிட்டால், சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. அதேபோல் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தல், புதிய சட்டப்பேரவை கட்டுதல், சுகாதார கட்டுமானத்திற்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி தேவை. கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி தேவை. நகர்புற மற்றும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ. 150 கோடி நிதி தேவை. நீண்ட கால நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்டவை பற்றியும் முதல்வர் ரங்கசாமி கோரிக்கையாக பிரதமர் மற்றும் நிதியமைச்சரிடம் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. கூட்டத்தொடரை கவர்னர் தமிழிசை நாளை உரையாற்றி தொடங்கி வைக்கிறார். அடுத்து 17ந் தேதி  நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
Published by:Esakki Raja
First published:

Tags: PM Modi, Puducherry

அடுத்த செய்தி