Home /News /puducherry /

புதுச்சேரியிலும் கருணாநிதி சிலை - முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரியிலும் கருணாநிதி சிலை - முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுவை முதல்வர் ரங்கசாமி

புதுவை முதல்வர் ரங்கசாமி

“கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும்"

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி  அரசு சார்பில் புதுச்சேரியில் கருணாநிதிக்கு விரைவில் சிலை நிறுவப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரியில் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில் புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து ஒதியஞ்சாலை அண்ணா சிலை வரை திமுகவினர் அமைதி பேரணி சென்று, கருணாநிதி திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் திமுக மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ க்கள், நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, புதுச்சேரியில் கருணாநிதிக்கு திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

திமுக தொண்டர்கள் கலைஞருக்கு மரியதை செய்த போது


அதற்கு முதல்வர் ரங்கசாமி, “கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது, அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுச்சேரி அரசு சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரியில் சிலை நிறுவப்படும்" என்று உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது மாநில கழக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தற்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Raj Kumar
First published:

Tags: Karunanidhi statue, Puducherry

அடுத்த செய்தி