ஹோம் /நியூஸ் /Puducherry /

புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

புதுச்சேரியில் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் மழை நிவாரணமாக 5000 ரூபாய் வழங்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் அனைவருக்கும் மழை நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் மழை நிவாரணமாக வழங்கும் பணியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கும் பணியினை சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதேபோல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

Also read... உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்

பொங்கல் பண்டிகைக்கான இலவச பொருட்கள் அரசு நிறுவனமானஅமுதசுரபி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் நீங்கலாக சிவப்பு அட்டை தாரர்கள் 1,85,000 மஞ்சள் அட்டைதார்கள் 1,42,000 என பயன்பெறுவார்கள். இதன் மூலம் 156 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும்.

First published:

Tags: Puducherry