முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் த.பெ.தி.கவினருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல்.. கல் வீச்சில் இந்து முன்னணி நிர்வாகி படுகாயம்!

புதுச்சேரியில் த.பெ.தி.கவினருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல்.. கல் வீச்சில் இந்து முன்னணி நிர்வாகி படுகாயம்!

இந்து முன்னணியினர்

இந்து முன்னணியினர்

ஒரு கட்டத்தில் செருப்பையும், கற்களையும்  வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  இதில் இந்து முன்னணி நிர்வாகி முருகையன் காயம் அடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இந்து மதம் குறித்து மனுதர்மத்தை மேற்கோள் காட்டி திமுக எம்பி ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பாஜக, இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். மேலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சாலையில், காமராஜர் சிலை அருகே மனுதர்மத்தை கொளுத்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன், பொதுச்செயலர் இளங்கோவன், திராவிடர் விடுதலைக் கழகம் அய்யப்பன், தமிழர் களம் அழகர் உள்பட பலரும் காமராஜர் சிலை அருகே  கூடினர். அங்கு வந்த காவல்துறையினர், மனுதர்மத்தை எரித்தால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதைனையடுத்து த.பெ.தி.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் காமராஜ் சாலை பெரியார் சிலை அருகே ஒன்று கூடினர். இந்து முன்னணி நிர்வாகிகள் சனில்குமார், முருகையன், பாஜக பொதுச்செயலர் ரவிசந்திரன், பாஜக பட்டியலின தலைவர் தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர். பின்னர், ஊர்வலமாக காமராஜ் சிலை நோக்கி நடந்து வந்தனர்.

அப்போது, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு தர்மத்தை  கிழித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர், வாகனத்தில் ஏற்றினர். அப்போது அருகே வந்த இந்து முன்னனி மற்றும் பாஜகவினர் கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் எதிர் எதிராக கோஷம் எழுப்பினர்.

இதையும் வாசிக்க: ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி…

ஒரு கட்டத்தில் செருப்பையும், கற்களையும்  வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  இதில் இந்து முன்னணி நிர்வாகி முருகையன் காயம் அடைந்தார். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் கண்காணிப்பாளர் வம்சி ரெட்டி, ஆய்வாளர் குமார் மற்றும் இரு காவலர்கள் காயமடைந்தனர்.

காவல்துறையினர் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்ற நிலையில் இந்து முன்னணியினர் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நேரு வீதியில் ஊர்வலமாக சென்று எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் இரு தரப்பில் இருந்தும் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பெரியகடை காவல்துறையினர் கைது  செய்தனர். 

First published:

Tags: A Raja, Hindu Munnani