புதுச்சேரியில் இன்று காலையில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மணக்குள விநாயகர் கோயில் யானை:
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, ஈஸ்வரன் கோயிலில் உள்ள தனது தங்கும் இடம் பகுதியில் இருந்து காலை 6 மணிக்கு தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதுபோல இன்றும் அதிகாலையில் யானை லட்சுமி தனது பாகனுடன் சென்றுள்ளது. அப்போது வாக்கிங் வந்த யானை மிஷன் வீதி கலவை கல்லூரி அருகே 6:30 மணிக்கு திடீரென சாலையில் சுருண்டு விழுந்து இறந்தது. அப்படி மயங்கி விழுந்தபோது அதன் அருகில் நின்ற காரின் மீது விழுந்து சாலையில் சாய்ந்துள்ளது. இதில் அந்த கார் சேதமானது.
புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமிக்கு தற்போது 33 வயதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது.
Also see... புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்!
கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை இறந்த பகுதிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சார சாரையாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் யானை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஜென்மராக்கினி அன்னை பேராலய கொடி:
புதுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 331-வது ஆண்டு பங்கு பெருவிழா வெகு விமர்சையாக நேற்று மாலை துவங்கியது. இதில் புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் பங்கு தந்தை அல்போன்ஸ் சந்தனம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு பின்னர் விழா கொடி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஆலய கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது.
கொடி ஏற்றப்பட்ட போது திடீரென அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறுந்த கொடியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுத்தி சிறிய கொடி ஏற்பட்டது. இதனால் கொடியேற்றத்துக்கு வந்த கிறிஸ்துவ மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த இரு நிகழ்வுகளையும் குறிப்பிட்டு அடுத்தடுத்து இப்படியான சம்பவம் நடந்துவிட்டதாக புதுச்சேரி பக்தர்கள் சோகத்தில் உள்ளனர். அதேவேளையில் யானை லட்சுமியின் உயிரிழப்பு உடல்நிலை பிரச்னை காரணமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓராண்டு கால மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை உட்பட அனைத்தையும் புதுச்சேரி அரசு உடனடியாக புதுச்சேரி மாநில மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
Also see... திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!
அதேபோல், தேவாலய கொடி அறுந்தது குறித்து திருப்பலியில் பேசிய புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், ”இன்று முதல் நவ நாட்களை நாம் துவங்கி உள்ளோம். நல்ல முறையில் ஜபமாலை செய்து பவனி வந்து கொடி ஏற்றினோம். ஆனால் கொடி அறுந்து விட்டது. ஏன் இப்படி நடந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இது நல்ல லட்சணம் அல்ல என நினைத்துக் கொண்டிருப்பார்கள். கயிறு தான் அருந்தது. கொடியை மேலே கொண்டு சென்று கட்டிவிட்டார்கள். அது பறந்து கொண்டு இருக்கிறது” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Christ Church, Dead, Elephant, Puducherry