ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. அசத்திய புதுச்சேரி ஆசிரியர்..!

பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்.. அசத்திய புதுச்சேரி ஆசிரியர்..!

பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்

பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில்

Puducherry News : பழைய கம்ப்யூட்டர் பொருட்களில் கிறிஸ்மஸ் குடில் செய்து புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அசத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம், உப்புகார வீதியில் வசிப்பவர் சுந்தரராசு. அரசு பள்ளி ஆசிரியர். இவர் ஆண்டுதோறும் விதவிதமான பொருட்களை கொண்டு தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது வழக்கம்.

ஆசிரியர் சுந்தரராசு ஒரு கன செ.மீட்டரில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றவர். காய்கறி, பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்காய், 25 வகையான சிறு தானியம்,700 புத்தகங்கள்,1000 துணி பைகள், நொறுக்கு தீணிகள், டிஸ்போசல் சிரிஜ் ஊசி ஆகியவற்றை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் குடில் வடிவமைத்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது 10-வது ஆண்டாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வித்தியாசமான முறையில் கம்ப்யூட்டர் மற்றும் பழுதான மின்னணு பொருட்களை கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் இந்தியாவை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

இதையும் படிங்க : துடைப்பத்துடன் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு...

அதில் கம்யூட்டர் மற்றும் பழைய மானிட்டர் டூம் பகுதியை குடில் தொழுவாகவும், ஹார்டு டிஸ்க்கு, கேமிரா பென்ட்ரைவ், டேப், எல்.சி.டி மானிட்டர், லேப்டாப், இன்டர்நெட் மோடம், ஸ்கேனர் மற்றும் மதர் போர்டுகளை கொண்டு சிட்டி பில்டிங், சி.டி.யை கிறிஸ்துமஸ் மரமாக உருவாக்கியுள்ளார்.

பிரிண்டர் மிஷின் ராணுவ தளமாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.மற்ற எல்க்ட்ரானிக் கழிவு பொருட்களை கொண்டு குடிலின் மற்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல் கையில் செல்போனுடன், ஹெட்போனில் பாடல் கேட்பது போல் தத்துரூபமாக செய்துள்ளார்.

இந்தியா அனைத்தும் டிஜிட்டல் மையமாக திகழும் இந்த சூழலில் அவற்றை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மூலம் இந்த கிறிஸ்துமஸ் குடில் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர் சுந்தரராசு தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடிலை இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தை சார்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆசிரியர் சுந்தரராசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry