புதுச்சேரி குயவர்பாளையத்தில் பெட்டிக்கடை ஒன்றில் கடந்த 15ஆம் தேதி இரவு 20 வயது மிக்க வாலிபர் 11 வயது சிறுவனை பைக்கில் வைத்திருந்தார். அச்சிறுவன் அழுது கொண்டிருந்ததால் பொது மக்கள் விசாரித்தபோது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து உருளையன் பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் கோடக்குப்பத்தை சேர்ந்த சிறுவனை கடத்தி வந்தது தெரியவந்தது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்க முயற்சித்துள்ளார் அந்த வாலிபர். அவரின் பெயர் அமீத் அப்துல் காதர் (20). ஆனால் அவரை பொதுமக்கள் பிடித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வெளிநாட்டவர் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளை கடத்தி பணம் பறிக்க வாலிபர் திட்டமிட்டிருந்தார் என்பதும் இதற்காக தனது இருசக்கர வாகனம் பழுதானது போல் நடித்து வீதியில் விளையாடிய சிறுவனை வாகனத்தை தள்ளுமாறு கூறியுள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Also see... ஆட்டோமேட்டிக் லாக்கால் விபரீதம்.. வீட்டில் தனியே சிக்கிக்கொண்ட நபர்
பிறகு வாகனத்தை தள்ளிக்கொண்டு மறைவான பகுதிக்கு சென்றபோது அவனை கடத்தியுள்ளார். ஆனால் வரும் வழியில் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Kidnapping Case, Puducherry