Home /News /puducherry /

விவசாயிகளின் ரூ.13.8 கோடி கடன் தள்ளுபடி.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

விவசாயிகளின் ரூ.13.8 கோடி கடன் தள்ளுபடி.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Puducherry | மரபணு குறைப்பாடு உள்ள குழந்தைகளின் பராமரிப்பு  மாதம் ரூ.1000 வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ” புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இடம் தேர்வில் இன்னும் இறுதியாகவில்லை. விரைவில் புதிய சட்டமன்றம் கட்டும்பணி துவங்கும் என்றார். 2022 ம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய  கடன் 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும் என அறிவித்த முதல்வர், நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த  30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் அரசின் இலவச துணி வகைகள் வழங்கப்படும். விழாக்கால  துணி மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு நிறுவனம் மூலம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள அரசின் 3 மில்களை இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு  மீண்டும் செயல்படுத்துவோம்  என்றும் அரசு கலந்தாய்வில் தேர்வாகும் முதுகலை பட்டப்படிப்பிற்கும் அரசு நிதி வழங்கும் எனவும் ரங்கசாமி உறுதியளித்தார். கடற்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாரம்பரியமிக்க நகராட்சி கட்டிடம் விரைவில் திறக்கப்படும். 70 முதல் 80 வயதுள்ள முதியோருக்கு  உதவித்தொகை 2500 ல் இருந்து  ரூ.3000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ரங்கசாமி, துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கபடுவார்கள் எனவும் கூறினார்.

நகராட்சி,  கொம்யூன் ஊழியர்களுக்கு ஊதியம் அரசே தர வேண்டியுள்ளது. இதுகுறித்து கலந்து பேசி, கமிட்டி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சம்பளம்  தரமுடியாது என சொல்லவில்லை. எனவே அவர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும். கட்டட  தொழிலாளர் நல வாரிய பயனாளிகளின் பிள்ளைகள் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1000, 9,10ம் வகுப்புகளுக்கு, ரூ.1500, 11,12ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2000 வழங்கப்படும்.

ஆட்டோ நலவாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை 70 முதல் 80  வயது வரை ரூ.3 000 ஆக உயர்த்தப்படும். திருமண உதவித்தொகை  ரூ.7000 திலிருந்து ரூ.15000ஆக உயர்த்தி வழங்கப்படும். மகப்பேறு உதவி ரூ. 5000 முதல் ரூ.10000 மாக உயர்த்தி வழங்கப்படும்.  ஈமச்சடங்கு நிதி ரூ.10,000 முதல்  ரூ.15,000மாகவும், மருத்துவ உதவித்தொகை ரூ.500ல் இருந்து ரூ.2000மாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதய பிரச்சினை உள்ளோருக்கு ரூ.1 லட்சமும், சிறுநீரக பிரச்சினை உள்ளோருக்கு ரூ.50000 வழங்கப்படும்.

Also see... தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தொகுதி வளர்ச்சிக்கு தொகுதி தோறும் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்படுவர். மரபணு குறைப்பாடு உள்ள குழந்தைகளின் பராமரிப்பு  மாதம் ரூ.1000 வழங்கப்படும். என்ஆர்எச்எம் ஊழியர்கள், எய்ட்ஸ்  கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை  எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ.12 மானியம் தரப்படும்” என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Puducherry, Puthucherry cm

அடுத்த செய்தி