ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

உலக நாடுகளின் தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்திய சிறுமி.. நேரில் வாழ்த்து கூறிய புதுச்சேரி முதல்வர்!

உலக நாடுகளின் தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்திய சிறுமி.. நேரில் வாழ்த்து கூறிய புதுச்சேரி முதல்வர்!

196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய சிறுமி

196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்திய சிறுமி

196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற பெற்றோர் முயற்சி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

சென்னையை சேர்ந்த 12 வயதான சிறுமி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்று 196 உலக நாடுகளின் தேசிய கீதங்களை பாடி வாழ்த்து பெற்றார்.

சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா ஆகிய தம்பதியரின் 12 வயது மகள் தான் சுபிக்‌ஷா. தனது மகளை பாடகராக்க வேண்டும் என்ற ஆசையில் சிறு வயதில் இருந்தே இவரது பெற்றோர் உலக நாடுகளின் தேசிய கீதங்களை சொல்லிக் கொடுத்து பாட வைத்து வந்துள்ளனர்.

உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 பாடல்கள் உள்ளன. ஆனால் இந்த சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக மூன்று நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார்.

புதுச்சேரி வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடி அசத்தினார். இதனை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.

இதனை அடுத்து 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry, Record