ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

உதயநிதி அமைச்சராவதுதான் திராவிட மாடல் : தமிழிசை விமர்சனம்!

உதயநிதி அமைச்சராவதுதான் திராவிட மாடல் : தமிழிசை விமர்சனம்!

புதுவை ஆளுநர் தமிழிசை

புதுவை ஆளுநர் தமிழிசை

இங்கு அடக்குமுறை ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் தான் ஆள் ஆளுக்கு ஆட்சி நடத்துகிறார்கள். புதுச்சேரியில் உங்கள் ஆட்சி தேவையில்லை 300 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்கு தேவை. அது கொடுத்தால் போதும் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பாரதி பூங்காவில் மின் ஒளியில் ஆயி மண்டபம், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் பயணியர் வசதிகள் மற்றும் படித்துறை மேம்பாடு, திருநள்ளாரில் ஆன்மீக பூங்கா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு நீல கொடி தரச் சான்றிதழ் ஆகிய திட்டங்களை மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க :  புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, “புயலை தாண்டி விட்டோம் என சிலர் முதுகை தட்டி கொள்கிறார்கள். புதுச்சேரி அரசு இரவு பகலாக பாடுபட்டதால் புயல் பாதிப்பு இல்லை. கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர் முன் முதல்வர் குறைகளை சுட்டி காட்டும் அளவிற்கு சிறப்பான ஆட்சி நடத்துகிறோம். நான் அடக்கு முறை ஆளுநர் அல்ல. புதுச்சேரி வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஆளுநர்” என தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை,  “இங்கு நல்ல ஆட்சி நடக்கிறது. இங்கு திராவிட மாடல் தேவை இல்லை. அண்ணன் ஸ்டாலின் பேசியது சரியில்லை என்றவர், ’பொம்மை ஆட்சி இங்கு இல்லை. கர்நாடகாவில்தான் நடக்கிறது என கர்நாடக முதல்வரின் பெயரைக் குறிப்பிட்டு நகைச்சுவையாக கூறினார்.

மேலும், இங்கு அடக்குமுறை ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் தான் ஆள் ஆளுக்கு ஆட்சி நடத்துகிறார்கள். புதுச்சேரியில் உங்கள் ஆட்சி தேவையில்லை 300 ஏக்கர் நிலம் விமான நிலையத்திற்கு தேவை. அது கொடுத்தால் போதும். உதயநிதி அமைச்சராவதுதான் திராவிட மாடல். நாங்க 25 ஆண்டுகள் உழைத்து பதவிக்கு வந்துள்ளோம் வாரிசு என்பதால் வரவில்லை என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Puducherry, Tamilisai Soundararajan