முகப்பு /செய்தி /புதுச்சேரி / புதுச்சேரியில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

புதுச்சேரியில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

பதிவான சிசிடிவி காட்சி

பதிவான சிசிடிவி காட்சி

அந்த சிசிடிவி காட்சியில் முதலில் வந்தவர் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்வதும், பின்னால் இருவர் அவரை பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் விடியற் காலை மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் பஜனை மடத்து வீதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்துவது வழக்கம். இதேபோல கடந்த 27 ஆம் தேதி இரவு பணி முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தவர், வழக்கம் போல் தனது ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த யமஹா வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : கழிப்பறை இல்லாமல் அவதியுறும் இருளர் இன மக்கள்... புதுச்சேரியில் அவலம்..!

மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காக வீட்டின் வெளியே வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது 28ஆம் தேதி காலை 5 மணியளவில் மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பஜனை மடம் வீதிக்கு வருவதும், பின்னர் ஒருவர் அருணின் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு சிறிது தூரம் தள்ளி செல்வதும்  மற்ற இருவர் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் முதலில் சென்றவரை பின் தொடர்ந்து செல்வதுமாக பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நபர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை செய்து தேடி வருகின்றனர்.

First published:

Tags: Bike Theft, CCTV, Crime News, Puducherry