Home /News /puducherry /

உல்லாச வாழ்க்கைக்காக திருடனாக மாறிய சுமை தூக்கும் தொழிலாளி.. புதுச்சேரியில் பைக் திருடி ஸ்பேர் பார்ட்ஸ் ஆக பிரித்து விற்பனை...

உல்லாச வாழ்க்கைக்காக திருடனாக மாறிய சுமை தூக்கும் தொழிலாளி.. புதுச்சேரியில் பைக் திருடி ஸ்பேர் பார்ட்ஸ் ஆக பிரித்து விற்பனை...

பைக் திருடியவர் கைது - புதுச்சேரி

பைக் திருடியவர் கைது - புதுச்சேரி

Puducherry | புதுச்சேரியில் செய்தித்தாளில் வாகன திருட்டு செய்தியை பார்த்து பைக்கை திருடி பிரித்து விற்பனை செய்தவர் சிசிடிவி காட்சியால் போலீஸிடம் சிக்கினார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பைக் திருடிய சுமை தூக்கும் தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி நகர பகுதியில் வணிக வளாகங்களை குறிவைத்து அங்கு வரும் இரு சக்கர வாகனங்களை திருடிய கும்பலை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய 50 வாகனங்களை வரிசைப்படுத்தி புகைப்படம் செய்தி தாள்களில் வந்தன. இதனை பார்த்த சுமை தூக்கும் தொழிலாளியான  அருமார்த்தபுரம் பகுதியை சேர்ந்த அங்கப்பன் (24) இருசக்கர வாகனத்தை திருடி உல்லாசமாக வாழ திட்டம் போட்டார்.

இந்நிலையில் அவர் ஒரு பல்சர் வண்டியை திருடி வந்த போது  உருளையான்பேட்டை போலீசார் நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே நேற்றைய முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்ட உடன்  அங்கப்பன்தான் ஒட்டி வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஒடினார்.

அவரை காவலர் ஒருவர் துரத்திய போது அவரை பிடிக்க முடியவில்லை. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் அந்த வாலிபர் ஒட்டி வந்தது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என தெரியவந்ததை அடுத்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு அந்த வாலிபர் யார் என்று தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சிசிடிவி கேமிராவில் போலீசார் வாகன தணிக்கையில் தப்பி சென்றவர் என போலீசார் உறுதி செய்ததை அடுத்து  அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் அங்கப்பன் என்பது தெரிய வந்தது.

உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பணம் தேவைப்பட்டதால் இருசக்கர வாகன திருட்டில் ஈடிப்பட்டதும், கடந்த 1 வாரத்திற்கு முன்பு இதே போல் ஒரு வாகனத்தை திருடி அதனை தனி தனியாக பிரித்து விற்பனை செய்ததாகவும், இரண்டாவதாக நெல்லித்தோப்பு கண்ணார வீதியில் பல்சர் வாகனத்தை திருடும் போது சிசிடிவி கேமராவில் பதிவானதால் தான் மாட்டி கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.



Also see... மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...

மேலும் ஒரு வாகனத்தை திருட நோட்டமிட்ட போது போலீசாரிடம் சிக்கியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து அங்கப்பன் மீது வழக்கு பதிவு செய்த உருளையான்பேட்டை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சுமை தூக்கும் தொழிலை விட்டு திருட்டில் ஈடுபட்டவர் தற்போது எண்ணுவது பணத்தை அல்ல.. சிறையில் கம்பியை..
Published by:Vaijayanthi S
First published:

Tags: Arrested, Bike Theft, CCTV, Puducherry

அடுத்த செய்தி