Home /News /puducherry /

மனைவி, குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - கடன் தொல்லையால் நிகழ்ந்த பரிதாபம்

மனைவி, குழந்தைகளை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை - கடன் தொல்லையால் நிகழ்ந்த பரிதாபம்

புதுச்சேரியில் கடன்தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டவரின் வீடு

புதுச்சேரியில் கடன்தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டவரின் வீடு

Puducherry : புதுச்சேரியில் கடன்தொல்லையால் மனைவி, குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் தபால்கார வீதியில் வசித்து வந்தவர் தியாகு என்ற தியாகராஜன்(38). இவருக்கு பச்சைவாழி(33) என்ற மனைவியும், லட்சுமி(6), ஆகாஷ்(4) என்ற குழந்தைகளும் இருந்தனர். ஆட்டோ டிரைவாக வேலை செய்து வந்த தியாகராஜன், பகுதி நேரமாக பெயிண்டிங் வேலையும் பார்த்து வந்தார். அதிக கடன் தொல்லையால் தியாகராஜன் அவதிப்பட்டு வந்தார். 18 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை தியாகராஜன் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ஜன்னலை திறந்து பார்த்தபோது தியாகராஜன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதையடுத்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Also see... தூத்துக்குடியில் கௌதாரி பறவைகளை வேட்டையாடிய சிவில் இன்ஜினியர்கள் கைது... துப்பாக்கிகள் பறிமுதல்..

போலீசார் வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஹாலில் மனைவி, குழந்தைகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தியாகராஜன் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Commit suicide, Crime News, Puducherry

அடுத்த செய்தி