முகப்பு /செய்தி /புதுச்சேரி / சுற்றுலா வந்த அமெரிக்க மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞர்.. புதுச்சேரியில் கொடூரம்!

சுற்றுலா வந்த அமெரிக்க மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞர்.. புதுச்சேரியில் கொடூரம்!

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

America tourist rape | சுற்றுலாவுக்காக கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரிக்கு வந்த அமெரிக்க மூதாட்டியை பலவந்தமாக வன்கொடுமை செய்த காஷ்மீர் இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அமெரிக்கா நீயூ ஜெர்சியை சேர்ந்த மூதாட்டி பத்ரிசியா போல்டஸ் (64) கடந்த ஜனவரி மாதம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது பெட்டிக்கடை நடத்தி வரும் காஷ்மீர் இளைஞர் மேஹ்ராஜுக்கும் அமெரிக்க மூதாட்டிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் கடந்த ஒரு மாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்த நிலையில், நேற்றை முன் தினம் மீண்டும் புதுச்சேரிக்கு சென்று தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது உதவி கேட்ட பத்ரிசியாவை கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளார். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த காஷ்மீர் இளைஞர் மேஹ்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Puducherry, Rape