Home /News /puducherry /

புதுச்சேரி மத்திய சிறையில் மருந்தில்லா மருத்துவம்... சிறை வாசிகள் மற்றும் ஊழியர்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை அளிப்பு

புதுச்சேரி மத்திய சிறையில் மருந்தில்லா மருத்துவம்... சிறை வாசிகள் மற்றும் ஊழியர்களுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை அளிப்பு

சிறைக்கைதிகளுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை...

சிறைக்கைதிகளுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை...

புதுச்சேரி மத்திய சிறையில் சிறை வாசிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் அக்கு பஞ்சர் மருத்துவம் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலை மாதிரி சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஸ்ரீஅரபிந்தோ சொசைட்டியுடன் இணைந்து சிறைவாசிகளை நல்வழிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அங்குள்ள சிறைவாசிகள் பல்வேறு பிரச்சனைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறைத்துறை ஐ.ஜி ரவி தீப்சிங் சாகர் சிறையில் உள்ள ஊழியர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்க உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து அரபிந்தோ சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த மும்பையின் பிரபல அக்குபஞ்சர் வல்லுநர் டாக்டர் பிரதீப் தேஷ்முக்  தலைமையில் அக்கு பஞ்சர் மருத்துவர்களால் சிறை ஊழியர்கள் மற்றும் சிறைவாசிகளுக்கு மருந்தில்லா மருத்துவம் அளிக்கப்பட்டது.

இதில் நீண்டநாள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் உடனடியாக அதன் பலனை பெற்று பயன் அடைந்தனர். இதில் சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் அசோகன், கண்காணிப்பாளர் பாஸ்கரன், உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Also see... பயணியர் ஆட்டோவில் புகுந்த ஐந்து அடி விஷபாம்பை மீட்ட தீயணைப்பு

மத்திய சிறை ஊழியர்களுக்கும் அக்குபஞ்சர் மருத்துவம்


அக்குபஞ்சர் மருத்துவத்தில் உடல் வலி, தீராத தலைவலி, மற்றும் செரிமான பிரச்சனை, கை, கால் வலி, மூட்டு வலி, உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து இல்லா மருத்துவத்தினால் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறை ஊழியர்கள் மற்றும் சிறைவாசிகள் கலந்து கொண்டு பயனடைந்ததாக தெரிவித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Central jail, Puducherry

அடுத்த செய்தி