ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சைபர் க்ரைம் வழக்குகளை தீர்க்க அதிநவீன காவல் நிலையம் - புதுச்சேரியில்  திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி

சைபர் க்ரைம் வழக்குகளை தீர்க்க அதிநவீன காவல் நிலையம் - புதுச்சேரியில்  திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி

சைபர் கரைம் காவல் நிலையம்

சைபர் கரைம் காவல் நிலையம்

சைபர் கிரைம் குற்றங்களில் புதிய தொழில்நுட்பம் அடிப்படையில் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கும் வகையில் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் சைபர் க்ரைம் வழக்குகளை விரைந்து முடிக்க அதிநவீன காவல் நிலையத்தை  முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க கூடுதல் காவல்துறையினர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி கோரிமேட்டில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளரிடம் பேசியவர், “ புதுச்சேரியில் 1600 சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் 500 வழக்குகள் முடிக்கப்பட்ட நிலையில் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனை விரைந்து முடிக்க கோரிமேடு காவலர் குடியிருப்பு வளாகத்தில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க தனி காவல் நிலையத்தை உருவாக்கி கூடுதல் பணி காவலர்களை நியமித்து வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சைபர் க்ரைம் குற்றங்களில் புதிய தொழில்நுட்பம் அடிப்படையில் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கும் வகையில் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூடுதல் பணியாற்றல் அமர்த்தப்பட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Also see... தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அலர்ட்

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் ரூபாய் 3 கோடி செலவில் பிரென்ச் பாரம்பரிய கட்டிடக்கலை வடிவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காவல்துறை டிஜிபி மனோஜ் குமார் லால் உட்பட காவல் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cyber crime, Puducherry