முகப்பு /செய்தி /புதுச்சேரி / WATCH - புதுச்சேரியில் விபத்து.. லாரியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. சிசிடிவி வீடியோ

WATCH - புதுச்சேரியில் விபத்து.. லாரியில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. சிசிடிவி வீடியோ

புதுச்சேரி விபத்து

புதுச்சேரி விபத்து

Road Accident | புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி டெம்போவில் இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கிழக்கு கடற்கரை சாலை-சாமிபிள்ளைத்தோட்டம் சந்திப்பில் போக்குவரத்து தடுப்பு அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு சாலையை கடக்கும் போது மக்கள் அடிக்கடி வாகன விபத்தில் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் சாலையை கடக்கும் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் முதியவர் வாகனத்தில் மோத இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது வேகமாக வந்த மினி லாரி ஒன்று இருவர் மீது மோத வந்தது. இதில் முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஆனால் பைக்கில் வந்த இளைஞர் லாரியுடன் இழுத்துச் செல்லப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also see... கோவையில் நடைபெற்ற அழகி போட்டி.. மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற 21வயது இளம்பெண்!

' isDesktop="true" id="858652" youtubeid="V1VvHItqePY" category="puducherry">

இந்த பதபதைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை மக்கள் பல மாதங்கள் வைத்து வருகின்றனர். அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துள்ளனர்.

First published:

Tags: Accident, Bike, Puducherry