புதுச்சேரியில் ஞாயிற்றுகிழமை என்றால் மிக கொண்டாட்டம் தான். அதுவும் வெளி மாநிலத்தவர் அதிகமாக வருவது, அங்கே விதவிதமாக கிடைக்கும் மதுவிற்காகத் தான். அப்படி ஆசைப்பட்டு வந்த ஒருவர் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், பெல்ட், தொப்பி, கூலிங் கிளாஸ் என அசத்தலாக இருந்தார்.
பரபரப்பான மிஷன் வீதியில் காலணி தைக்கும் கடை விடுமுறை என்பதால், அது மூடி இருந்தது. அதன் முன் பிளாஸ்டிக் விரிப்பை போட்டார். ஹாயாக கவிழ்ந்து படுத்து க்கொண்டு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றினார். சைடு டிஷ்ஷூகளை எடுத்து வைத்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜாலியாய் சிறுவர்களை போல் ஒய்யாரமாகப் படுத்து கொண்டே, மது அருந்தினார். மிகவும் பரபரப்பாக காணப்படும் வீதியை பற்றியோ, தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்பவர்களைப் பற்றியோ அவர் கொஞ்சம் கூட கவலை படவில்லை. தனக்குள்ளே பேசி கொண்டு மதுவை குடிக்கத் தொடங்கினார்.
Must Read : அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் வெளியேற்றம் - 144 தடை உத்தரவு
இவ்வாறு அவர் மது குடிப்பதை அந்த வழியாகச் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(புதுச்சேரி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.