Home /News /puducherry /

புதுச்சேரியில் 3 நாள் உணவு மற்றும் ஒயின் திருவிழா... விதவிதமான ஒயின் வகைகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

புதுச்சேரியில் 3 நாள் உணவு மற்றும் ஒயின் திருவிழா... விதவிதமான ஒயின் வகைகள் ஏற்பாடு - அமைச்சர் தகவல்

புதுச்சேரியில் மூன்று நாள் உணவு திருவிழா அறிவிப்பு

புதுச்சேரியில் மூன்று நாள் உணவு திருவிழா அறிவிப்பு

Puducherry Food Festival : புதுச்சேரி சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மூன்று நாள் உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெறும் என புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
புதுச்சேரி சுற்றுலாத்துறை தனியார் பங்களிப்புடன் வித்தியாசமான உணவு வகைகளுடனும், விதவிதமான ஒயின் வகைகளுடனும்  மூன்று நாள் உணவுத்திருவிழா நடைபெற இருப்பதாக  சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புழச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சுற்றுலாத்துறையுடன் VASCCO மற்றும் FETE N FIESTA இணைந்து PONDY FOOD FETE 2022 உணவுத் திருவிழா ஆகஸ்ட் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்களுக்கு பழைய துறைமுக வளாகத்தில் உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் மது பிரியர்களை குதூகலம் படுத்த விதவிதமான உணவு வகைகளும் வித்தியாசமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஒயின் வகைகளும் உணவுத் திருவிழாவில் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில் உணவு மற்றும் ஒயின் திருவிழா நடைபெற இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் தொடக்க விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த உணவுத் திருவிழாவில், புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளன என்றும், முன்னதாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் அணிவகுப்புகள் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Must Read : வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை... மயிலாடுதுறையில் பதற்றம் - போலீஸ் குவிப்பு

மேலும், இந்த உணவு திருவிழாவில் பல்வேறுபொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி (Live Music), நடனம் (Dance), மேஜிக் ஷோ ஆகியவை இடம்பெற இருப்பதாகவும் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: Food, Puducherry, Wine

அடுத்த செய்தி