Home /News /puducherry /

படி..படி..என தொல்லை கொடுத்த பெற்றோர்...கடத்தல் நாடகமாடிய 8ம் வகுப்பு மாணவன்...

படி..படி..என தொல்லை கொடுத்த பெற்றோர்...கடத்தல் நாடகமாடிய 8ம் வகுப்பு மாணவன்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Puducherry | படி படி என்று அப்பா அடிக்கடி திட்டியதாகவும், டியூசன் வீட்டுப்பாடம் செய்யாததால் கடத்தபட்டதாக நாடகம் ஆடியதாக மாணவன்  போலீசாரிடம் தெரிவித்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
படிக்க சொல்லி வற்புறுத்தியதால் தன்னை கடத்திவிட்டதாக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நாடகமாடியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது 13 வயது மகன் லாஸ்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம்(6ம் தேதி) மாலை சைக்கிளில் டியூசன் சென்டருக்கு சென்ற மாணவன், தன்னை 4 பேர் கொண்ட  கும்பல் கடத்தி சென்றதாகவும், தற்போது இந்திராகாந்தி சிலை அருகே நின்று கொண்டு இருப்பதாகவும் தந்தைக்கு போன் செய்து தெரிவித்தார்.

இது குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பெயரில் லாஸ்பேட்டை போலீசார், கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உடனடியாக போலிசார் இந்திராகாந்தி சிலைக்கு  சென்று பார்த்த போது அங்கு நின்று கொண்டு இருந்த மாணவனை மீட்டு லாஸ்பேட்டை காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

Read More : வீடு ஒத்திக்கு கொடுத்த பணத்தை மீட்க நடையாய் நடக்கும் மூதாட்டி ... போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை


அவரிடம் விசாரணை நடத்திய போது  முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். மாணவனே கடத்தல் நாடகம் நடத்தியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில்  போலீசார் விசாரணை செய்ததில் படிக்க சொல்லி அப்பா திட்டியதால் டியூசனுக்கு செல்ல பிடிக்காமல், கடத்தல் நாடகத்தை மாணவன் அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது.  மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று அவரை, தனியார் பள்ளியில் தந்தை சேர்த்து உள்ளார். மேலும் நன்றாக படிக்க வேண்டும், முதல் ரேங்க் எடுக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி திட்டி வலியுறுத்தி உள்ளார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த மாணவன், டியூசன்  ஹோம்வொர்க் செய்யவில்லை. தனது சைக்கிளை டியூசன் சென்டரில் நிறுத்தி விட்டு பேருந்தில்  ஏறி புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு அங்கிருந்து இந்திராகாந்தி சிலை சந்திப்புக்கு நடந்தே சென்று உள்ளார். இதையடுத்து அங்குள்ள குளிர்பான  கடையில் ஜூஸ் குடித்து விட்டு அங்கிருந்த நபர் ஒருவரிடம் போன் வாங்கி, தன்னை 4 பேர் கும்பல் கடத்தி சென்றதாக தந்தைக்கு போனில் தெரிவித்து உள்ளார்.

படி படி என்று அப்பா அடிக்கடி திட்டியதாகவும், டியூசன் வீட்டுப்பாடம் செய்யாததால் கடத்தபட்டதாக நாடகம் ஆடியதாகவும் மாணவன்  போலீசாரிடம் தெரிவித்தார். பின்பு மாணவனின்  பெற்றோர் மற்றும் டியூசன் ஆசிரியரை வரவழைத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா, காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் ஆகியோர் அறிவுரை வழங்கினர். பிள்ளைகளிடம் அன்பாகவும், பாசமாக இருக்க வேண்டும். படிக்க சொல்லி துன்புறத்த கூடாது அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

மாணவனின் கடத்தல் நாடகத்தால் நேற்று நள்ளிரவு 2 மணி நேரத்திற்கு நகர பகுதி போலீசார் ரகசியமாக  பரபரப்பாக செயல்பட்டனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி